
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே!!
5
4
EBOOK•
Completed#love #tamilstories #lovestories #tamilnovels
About
வணக்கம் நண்பர்களே...
எனக்கு அதிக வாசகர்களையும், கருத்துக்களையும் பெற்றுத் தந்த கதை இது.
நாயகி பிரார்த்தனா, நாயகன் அபிஷேக் இருவரும் சந்தித்துக்கொள்ளும் போதே மோதல்.
இதில் அவனுடைய அலுவலகத்திலேயே வேலை செய்யும் நிலை ஏற்பட அவள் அடுத்து
என்ன செய்தாள்? மற்றொரு நாயகி அஞ்சலி, நாயகன் தேவ் என பல கதாப்பாத்திரங்கள் கதையில் உண்டு.
காதல், நட்பு, தன்னலமற்ற அன்பு என அனைத்தையும் ஒன்று சேர சுவாரஸ்யம் கலந்து கதையைத் தந்திருக்கிறேன். படித்து உங்களுடைய கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்...
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே!!
அத்தியாயம் 1
“விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞான முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…”
என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்த பாடல், அந்த விநாயகர் கோவிலையும் தாண்டி தெருவில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்தப் பாடலுக்கு இணையாக தன் குரலையும் இணைத்து விநாயகரின் சந்நதி முன்பு நின்று, மார்பின் குறுக்கே கைகளைக் குவித்தபடி பாடிக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
அவள் மனம் முழுக்க அப்பொழுது விநாயகர் மட்டுமே நிறைந்திருந்தார். அவரின் தீவிர பக்தை
...Loading...
Enjoyed this?
Sign in to clap